LATEST NEWS
உங்க விசுவாசத்தை காட்டுங்க… வேற எதுவும் வேண்டாம்.. தவெகவில் இணைந்தவர்களுககு விஜய் அட்வைஸ்..!!
தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் புதிதாக இணைந்தவர்கள் தங்களது உழைப்பையும், விசுவாசத்தையும் காட்ட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். மாற்றுக் கட்சியினர் தவெக-வில் இணையும் நிகழ்வில் பேசிய அவர் இந்த முக்கியக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்நிகழ்வில் பேசிய விஜய், கட்சியில் புதிதாக இணைந்தவர்களின் உழைப்பை தாம் நன்கு அறிவேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நமக்கு எப்போதுமே மக்கள் பணி மட்டுமே மிக முக்கியமானது என்பதை அவர் மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார்.
இறுதியாக, இந்த மக்கள் பணிகளைச் செம்மையாகச் செய்வதற்கு கட்சியில் உள்ள அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பைத் தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். புதிய உறுப்பினர்களின் உத்வேகமான செயல்பாடுகள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் எனவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
