CINEMA
சட்டை போடாததற்கு காரணம் சொன்ன வரலட்சுமி கணவர்…. கண்டபடி விமர்சிக்கும் இணையவாசிகள்..!!
வரலட்சுமி சரத்குமார் வாரிசு நடிகையாக சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தாலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி என்ற திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார். அதனை தொடர்ந்து தாரை தப்பட்டை படத்தில் சசிகுமாருடன் நடித்திருந்தார். இவர் பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் தான் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.
கடந்த மாதம் வரலட்சுமி பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து வரலட்சுமி அவருடன் அடிக்கடி அவுட்டிங் சென்று அங்கு எடுத்த வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை பகிர்வார். அப்படி வெளியான வீடியோவில் சட்டை போடாமல் நிக்கோலாய் மாமனார் சரத்குமாருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது வரலட்சுமி ஏன் சட்டை போடவில்லை? என்று கேட்டுள்ளார். அதற்கு என்னுடைய மனைவி க்கு நான் சட்டை போடாமல் இருப்பது தான் பிடிக்கும். சட்டை போடாததை தான் அவர் விரும்புகிறார் என்று பதில் கொடுத்தார். இந்த வீடியோ வெளியான நிலையில் ரசிகர்கள் அவரை பங்கமாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.