CINEMA
என் கணவர் பார்க்கத்தான் முரடன்…. நிஜத்தில் அவர் ஒரு குழந்தை…. நடிகை வரலட்சுமி ஓபன் டாக்…!!

வரலட்சுமி சரத்குமார் வாரிசு நடிகையாக சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தாலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி என்ற திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார். அதனை தொடர்ந்து தாரை தப்பட்டை படத்தில் சசிகுமாருடன் நடித்திருந்தார். இவர் பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் தான் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.
கடந்த மாதம் வரலட்சுமி பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், தனது கணவர் பார்க்கத்தான் முரட்டுத்தனமாக இருப்பார், ஆனால் நிஜத்தில் குழந்தை மனது படைத்தவர் என வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். நிக்கோலாய்க்கு தமிழ் பேசவராவிட்டாலும் புரிந்து கொள்ள முடியும் எனவும், அவருக்கு தற்போது தான் தமிழ் கற்றுக் கொடுத்துக் வருவதாகவும் கூறியுள்ளார். மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும், வரலட்சுமி சரத்குமாருக்கும் கடந்த ஜூலையில் திருமணமானது.