CINEMA
மரண தண்டனை தான் ஒரே தீர்வு…. முக்கியமான விஷயம் குறித்து பேசிய இயக்குனர் அமீர்…!!
நடிகர், தயாரிப்பாளர் , திரைப்பட இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் அமீர் . இவர் 2002 ஆம் வருடம் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரைப்படத்துறைக்குள் நுழைந்தார். அதன் பிறகு மௌனம் பேசியதே என்ற படத்தை இயக்கினார். மேலும் சில படங்களிலும் இவர் நடித்துள்ளார் .
அதன் பிறகு ராம், பருத்திவீரன் ,ஆதி பகவன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் இயக்குனர் அமீர் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை தான் ஒரே தீர்வாக இருக்கும் என்றும் அரபு நாடுகளைப் போல சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.