CINEMA
பாலியல் வன்கொடுமை புகார்…. நடிகர் சித்திக் மீது வழக்குப்பதிவு…!!
கேரளத் திரை உலகில் ஹேமா கமிட்டி அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அடுத்தடுத்து நடிகர்கள் ராஜினாமா செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் பதிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது மஸ்கட் ஹோட்டலில் 2016 ஆம் வருடம் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் சில நாட்களுக்கு முன்பாக நடிகை ரேவதி சம்பத் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் நடிகர் சித்திக் மீது பாலில் வன்கொடுமை வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.