CINEMA
ஆகஸ்ட்-30 ஆம் தேதி சம்பவம் இருக்கு….. அட்லி மனைவி வெளியிட்ட வீடியோ… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!
நடிகை பிரியாவும், இயக்குனர் அட்லியும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். எந்த ஒரு நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் அட்லி தன்னுடைய மனைவி பிரியாவை அழைத்துக்கொண்டு தான் வருவார். சமீபத்தில் கூட ஆனந்த் அம்பானி ராதிகா திருமணத்திற்கு தன்னுடைய மனைவியை அழைத்து சென்றார்.
இந்த நிலையில் நடிகர் பிரியா தன்னுடைய இன்ஸ்டாவில் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக தெரிவித்து வீடியோ ஒன்றை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் பலரும் அவர் புதிய தொழிலை தொடங்கும் அறிவிப்பாக தான் இருக்கும் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.