CINEMA
எச்சரிக்கையா இருங்க…! எல்லாமே போச்சு… பிக்பாஸ் பிரபலம் ஷனம் ஷெட்டி வெளியிட்ட வீடியோ…. இணையத்தில் வைரல்…!!
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி. அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்த வருகிறார். மேலும் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் நடிகை சனம் செட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு எச்சரிக்கை செய்துள்ளார். அதாவது டெலிகாம் நிறுவனத்திலிருந்து தொடர்பு கொள்வதாக கூறி மோசடி நடந்ததாக கூறியுள்ளார் .
அந்த மோசடி கும்பல் சனம் செட்டியிடம் உங்களுடைய செல்போன் நம்பர் இன்னும் இரண்டு மணி நேரத்தில் டிஆக்டிவேட் செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்கள் .இதனால் பயந்து போன அவர், அவர்களிடம் தொடர்ந்து பேசுகையில் அவர்கள் ஆதார் உள்ளிட்ட விவரங்களை கொடுக்குமாறு கேட்டு இருக்கிறார்கள். அதன் பிறகு தான் இவர் உஷாராகி இருக்கிறார். ஆனால் அவருடைய தோழி ஒருவர் இந்த மோசடி கும்பல் மூலமாக பணத்தை இழந்ததாகவும் வங்கி கணக்கு ஹேக் விட்டதாகவும் கூறியிருக்கிறார். எனவே அனைவரும் எச்சரிக்கையாக விழிப்புணர்வுடன் இருங்கள் என்று அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.