CINEMA
நானும் ஒரு டீச்சரை லவ் பண்ணுனேன்…. அவங்க சேலை முந்தானையை…. நினைவுகூர்ந்த இயக்குனர் அமீர்…!!!

பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன் மற்றும் அவரோடு இணைந்து நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் வாழை. இந்த படத்திற்கு சந்தஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான மாமன்னன் படத்திற்கு பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதனை நவ்வி ஸ்டுடியோஸ் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் மனைவி திவ்யா தயாரிக்கிறார்.
ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறத. படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று ‘வாழை’ படத்தின் Pre Release நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசியஇயக்குநர் அமீர் பள்ளியில் படிக்கும்போது, தான் டீச்சரை லவ் பண்ணியதாக, கூறியுள்ளார். வாழை படத்தில் டீச்சரை மாணவன் லவ் பண்ணுவது போல காட்டப்படுகிறது. நானும் படிக்கும்போது ஒரு டீச்சரை லவ் பண்ணேன். அவங்க சேலை முந்தானையை பிடித்து பார்ப்பேன். ஒருவாட்டி இதை பார்த்த இன்னொரு டீச்சர் என்னை முட்டிப்போட சொல்லிட்டாங்க” என நினைவுகூர்ந்துள்ளார்.