CINEMA
உன்னை காதலிக்கிறேன்….! “வாழை” பட நடிகர் கலையரசன் போட்ட திடீர் பதிவு….!!
பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வாழை. கலையரசன் மற்றும் அவரோடு இணைந்து நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் மாரி செல்வராஜின் சிறுவயதில் நடந்த விஷயங்களை சொல்லியிருப்பார்.
இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவை கொடுத்து வருகிறார்கள். சமூக வலைதள பக்கத்தில் எங்கு பார்த்தாலும் வாழைப்பழத்தின் ரிவ்யூ தான் இருக்கிறது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பெரிதாக பேசப்படுகிறது. இந்த படத்தில் திவ்யா துரைசாமி வேம்பு என்ற கதாபாத்திரத்திலும், கலையரசன் கனி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தினார்கள். இந்நிலையில் நடிகர் கலையரசன் இயக்குனர் மாரி செல்வராஜ் அண்ணாவிற்கு நன்றி கூறி படத்தின் கதாபாத்திர புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், கனி என் கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும். உன்னை காதலிக்கிறேன். லுக் டெஸ்ட் ஆரம்பித்த நாள் தொடங்கி இன்று வரை வாழையில் கனி என்னை பிரமிக்க வைக்கிறது. சிறந்த மற்றும் விருப்பமான தோற்றங்களில் ஒன்று. இன்று மக்கள் கனியை நேசிக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram