CINEMA
புதுச்சேரி துணை நிலை ஆளுநருடன் விஜய் சேதுபதி திடீர் சந்திப்பு….. என்ன காரணம்…??
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. முன்னணி ஹீரோவாக வலம் வந்தாலும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் நடிப்பார். இவர் இறுதியாக விடுதலை திரைப்படத்தின் சூரி உடன் இணைந்து நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் அனைவரிடமும் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடைசியாக மகாராஜா படத்தில் நடித்துள்ளார் .
இந்நிலையில் படப்பிடிப்பிற்காக புதுச்சேரி வந்த நடிகர் விஜய் சேதுபதி, அங்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதனை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.