வசூல் சாதனை படைத்த டிமான்டி காலனி-2…. மொத்த வசூல் இவ்வளவா…? படக்குழு அறிவிப்பு…!! - cinefeeds
Connect with us

CINEMA

வசூல் சாதனை படைத்த டிமான்டி காலனி-2…. மொத்த வசூல் இவ்வளவா…? படக்குழு அறிவிப்பு…!!

Published

on

2017 ஆம் வருடம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் டிமான்டி காலனி. பார்ப்பவர்களுக்கு திகில் ஊட்டும் விதமாக அமைந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வந்தது. அதில் அருள்நிதி, பிரியா  பவானிசங்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக டிமான்டி காலனி  இரண்டாம் பாகம் வெளியானது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழில் இரண்டாம் பாகம் வெற்றியடைந்ததால் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி தெலுங்கின் பதிப்பில் ஆந்திர மற்றும் தெலுங்கானாவிலும் வெளியாக இருக்கிறது.

திகில் படத்திற்கு மக்கள் எப்போதும் கொடுக்கும் ஆதரவு இந்த படத்திற்கும் பெரிய அளவில் கிடைத்துள்ளது. முதல் நாளிலிருந்து நல்ல வசூல் வேட்டை நடத்தும் டிமாண்டி காலனி 2 படம் மொத்தம் ரூ.55 கோடி வசூலை குவித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement