CINEMA
விஜய் ஆண்டனிக்குள் இப்படியொரு முகம் இருக்கா…? அவர் சொன்ன அந்த வார்த்தை…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்தான் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் கடைசியாக ரோமியோ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குனர் வைத்தியநாதன் இயக்கினார். விஜய் ஆண்டனி ஒரு நடிகர் மட்டுமல்ல இசையமைப்பாளர், பாடகர் என பலமுகம் கொண்டவர். இவருடைய 16 வயது மகள் மீரா கடந்த வருடம் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனி மீண்டு வர ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி உள்ளார். அதில் நீங்கள் எதற்காக அதிகமாக கோபம் படுவீர்கள்? அடிக்கடி கோபம் வந்தால் என்ன செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி, எனக்கு கோபம் வருவது மிக குறைவு. ஆனால் ஆரம்ப காலத்தில் எனக்கு அதிகமாக கோபம் வரும். அந்த சமயத்தில் செல்போனை தான் அதிகமாக உடைப்பேன். அப்படி ஐந்து செல்போன் உடைந்திருக்கிறது. கோபத்தினால் நிறைய இழந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்களோ விஜய் ஆண்டனிக்குள் இப்படி ஒரு முகம் உள்ளதா? என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்