LATEST NEWS
“இது என்ன விளையாட்டு..?” மொட்டை அடித்து வந்த மாணவன்… வகுப்பறையில் தலைமை ஆசிரியர் செய்த காரியம்..! வைரல் வீடியோவால் சட்டென பாய்ந்த சஸ்பெண்ட் உத்தரவு..!!
உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டம் பிரௌலி பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் முதல்வர் தினேஷ் குமார், வகுப்பறைக்குள் மொட்டை அடித்திருந்த ஒரு மாணவனின் தலையில் கையால் தட்டுவது போல் ‘தபலா’ வாசித்து விளையாடிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த சமயத்தில் வகுப்பறையில் இருந்த மற்ற குழந்தைகளும் சிரிப்பதாக வீடியோவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, கல்வித் துறை உடனடியாக நடவடிக்கையில் இறங்கி, சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட அடிப்படை கல்வி அதிகாரி ராஜேஷ் குமார் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, முதல்வர் தினேஷ் குமாரை உடனடியாக சஸ்பெண்ட் செய்தார். இந்த வீடியோவில் காணப்பட்ட செயல் பொருத்தமற்றது என்றும், அது மாணவனின் கண்ணியத்திற்கு எதிரானது என்றும் கல்வித்துறை தெரிவித்தது. இடைநீக்க உத்தரவின்படி, தினேஷ் குமார் சைபாயில் உள்ள வட்டார கல்வி வள மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு, அதில் வெளிவரும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
https://www.instagram.com/reel/DeQ8MunDyrC/?utm_source=ig_web_button_share_sheet
இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த பஸ்ரேஹர் வட்டார கல்வி அதிகாரி உதய் சிங் ராஜ் என்பவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடைமுறையை முடித்து விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள காலத்தில் துறை விதிகளின்படி தினேஷ் குமாருக்கு பிழைப்பூதிய உதவித்தொகை மற்றும் தகுதிக்கு ஏற்ப பிற படிகளும் வழங்கப்படும். இந்த விசாரணை அறிக்கையின் முடிவையே தற்போது அனைவரும் எதிர்நோக்கியுள்ளனர்.
