“அரசியலுக்கு வரும் முன்பே அனிதா வீட்டிற்கு சென்றவர் விஜய்!” – திமுக MLA-விற்கு அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் சுடச்சுட பதிலடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அரசியலுக்கு வரும் முன்பே அனிதா வீட்டிற்கு சென்றவர் விஜய்!” – திமுக MLA-விற்கு அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் சுடச்சுட பதிலடி..!!

Published

on

தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானத்தின் மீது திமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர் ராஜ்மோகன் தகுந்த விளக்கமளித்து பதிலடி கொடுத்துள்ளார். தமிழக முதல்வர் விஜய், தான் தீவிர அரசியலுக்குள் நுழைவதற்கு முன்பாகவே நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக மாறிய மாணவி அனிதாவின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியவர் என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் நீட் விவகாரத்தில் தமிழக முதல்வரின் அர்ப்பணிப்பையும், அவரது ஆரம்பகால ஆதரவையும் அவர் அவையில் உறுதிபடத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், இந்த நீட் எதிர்ப்புத் தீர்மானம் அரசியல் லாபங்களுக்காக கொண்டுவரப்பட்டது அல்ல என்பதை தெளிவுபடுத்தினார். ஒருசில குறிப்பிட்ட மாணவர்கள் மட்டுமே இந்தத் தேர்வு முறையினால் பயன்பெறுவதை விட, இதனால் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்படும் பல லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனே முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார். அடித்தட்டு மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை சிதைக்கும் நீட் தேர்வை ஒழிப்பதே தங்களின் முதன்மை நோக்கம் என்றும் அவர் பேசினார்.

Advertisement

பாதிக்கப்படும் ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தையும், அவர்களின் கல்வி உரிமையையும் கருத்தில் கொண்டே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அமைச்சர் ராஜ்மோகன் சுட்டிக்காட்டினார். மாணவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் இந்த உன்னத முயற்சிக்கு அனைவரும் ஆதரளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in