“உங்களுக்கு மனசாட்சியே இல்லையா..?!” முதலில் மாத்திரையைக் காட்டு… அப்புறம்தான் தண்ணி.. VietJet விமானத்தில் முதியவருக்கு நேர்ந்த கொடூரம்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உங்களுக்கு மனசாட்சியே இல்லையா..?!” முதலில் மாத்திரையைக் காட்டு… அப்புறம்தான் தண்ணி.. VietJet விமானத்தில் முதியவருக்கு நேர்ந்த கொடூரம்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த சம்பவம்..!!

Published

on

வியட்ஜெட் விமானத்தில் பயணித்த முதியவர் ஒருவர், தான் மாத்திரை சாப்பிடுவதற்காக விமானப் பணிப்பெண்ணிடம் குடிநீர் கேட்டுள்ளார். ஆனால், அதைக் கொடுக்க மறுத்த பணிப்பெண், “நீங்கள் பொய் சொல்கிறீர்கள், முதலில் உங்கள் மாத்திரையைக் காட்டினால் மட்டுமே தண்ணீர் தரப்படும்” என்று நிபந்தனை விதித்துள்ளார். நடுவானில் மாத்திரை சாப்பிட நீர் கேட்ட வயதானப் பெண்ணை, பொய்யர் என்று கூறி அவமதித்த இந்தச் சம்பவம் அங்கிருந்த சக பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VietJet फ्लाइट…यहां अगर आपको बीच रास्ते में दवाई खानी पड़ जाए तो पहले दवाई दिखानी पड़ेगी, तभी पानी मिलेगा।

फ्लाइट में एक बूढ़ी आंटी ने पानी मांगा क्योंकि उसे दवाई खानी थी।

क्रू ने कहा कि आप झूठ बोल रही हैं, पहले दवाई दिखाओ, तब पानी मिलेगा।

साथ बैठे बेटे को यह सुनकर बहुत बुरा… pic.twitter.com/vb1dBr0Spr— Rahul Kumar (@MukAn_X) August 11, 2026

தாய்க்கு நேர்ந்த இந்த அவமானத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் அமர்ந்திருந்த அவரது மகன், விமானப் பணியாளர்களின் இந்த மோசமான அணுகுமுறையைக் கண்டித்து கடுமையாக வாதிட்டார். பயணிகள் யாருடனும் இப்படி மரியாதைக் குறைவாகப் பேசக் கூடாது என்று அவர் சுட்டிக்காட்டிய நிலையிலும், பணிப்பெண்கள் தங்கள் நிலைப்பாட்டிலேயே பிடிவாதமாக இருந்து பின்னர் அனைத்து ஆதாரங்களையும் சரிபார்த்த பிறகே தண்ணீரைக் கொடுத்துள்ளனர். வெறும் குடிநீர் கேட்ட வயதானப் பெண்மணியிடம் VietJet விமானக் குழுவினர் நடந்துகொண்ட இந்த அலட்சியமான முறை சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in