LATEST NEWS
பகை நாடுகளே பேசும்போது… பக்கத்து மாநிலத்தோட பேசிப் பார்த்தா என்னனு நினைச்சேன்.. காவிரி விவகாரத்தில் திமுகவின் வாயை அடைத்த முதலமைச்சர்..!!
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பெங்களூரு பயணம் மேற்கொண்டது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய விவாதத்திற்கு, காவிரி விவகாரத்தில் ஒரு புதிய முயற்சியை எடுத்துப் பார்க்கலாம் என்ற நோக்கில் தான் அங்கு சென்றதாகச் சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளார். உலகளவில் தீர்க்க முடியாத பெரும் பகை கொண்ட நாடுகள் கூட தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்க்க முற்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், அண்டை மாநிலமான கர்நாடகாவுடன் நேரடியாகப் பேசிப் பார்த்தால் என்ன என்று தோன்றியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கும், காவிரி நீர்ப் பகிர்வுப் பிரச்சினைக்குச் சுமுகமான தீர்வு காண்பதற்கும் அண்டை மாநில அரசுடன் சுமுகமான உறவைப் பேணுவது அவசியம் என்ற தவெக அரசின் ராஜதந்திர அணுகுமுறையை அவர் தனது உரையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். எதிர்க்கட்சியான திமுகவின் தொடர் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ள முதலமைச்சரின் இந்த அதிரடி விளக்கம் தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரங்களில் மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
