LATEST NEWS
“டெய்லி நியூஸ்பேப்பர் படிச்சா தெரிஞ்சிருக்கும்” குறுவை சாகுபடி விவகாரத்தில் கேள்வி கேட்ட உதயநிதிக்கு… நக்கலாக பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்..!!
தமிழகச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கேள்விக்கு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கிண்டலாகப் பதிலடி கொடுத்துள்ள விவகாரம் தற்பொழுது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது குறுக்கே கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “குறுவை சாகுபடி செய்ய முடியாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசிடமிருந்து என்ன நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது?” எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், “தினசரி செய்தித்தாள் படித்தால் நாட்டில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கே தெரிந்திருக்கும்” என மிகவும் காரசாரமாகவும் கிண்டலாகவும் அவையிலேயே பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், தங்களது அரசால் குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு ஏற்கனவே விவசாயிகளுக்கு முழுமையாக வழங்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய், அது வழங்கப்பட்டது கூட எப்படித் தெரியாமல் போனது என்று கேள்வி எழுப்பினார். தவெக – திமுக இடையே சட்டமன்றத்தில் அரங்கேறிய இந்த நேரடி வார்த்தை மோதல், சமூக வலைத்தளங்களிலும் தற்பொழுது அரசியல் பேசுபொருளாக மாறியுள்ளது.
