“பிறந்தநாள் பார்ட்டி…” போதையில் தூங்கிய தோழியை…! அடுத்தடுத்து சீரழித்த நண்பர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பிறந்தநாள் பார்ட்டி…” போதையில் தூங்கிய தோழியை…! அடுத்தடுத்து சீரழித்த நண்பர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

Published

on

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பிலிம் நகரைச் சேர்ந்த ஒரு இளம்பெண், தன் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகத் தன்னுடன் ஒரே அலுவலகத்தில் பணியாற்றும் நண்பர்களான அபிநய் மற்றும் வம்சி ஆகியோரைத் தனது இல்லத்திற்கு அழைத்துள்ளார். அங்கு மூவரும் கேக் வெட்டி மகிழ்ந்ததோடு, ஒன்றாக மதுவும் அருந்தியுள்ளனர்.

நள்ளிரவில் அந்தப் பெண் போதையின் காரணமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சமயம் பார்த்து, அவரிடம் அபிநய் தவறாக நடந்து கொண்டுள்ளார். இந்த விபரீத சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் அரங்கேறிய நிலையில், அண்மையில் ஜூன் 21-ஆம் தேதி மீண்டும் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்த அபிநய், அவரை மிரட்டி இரண்டாவது முறையாகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

Advertisement

இந்தக் கொடுமை குறித்துத் தனது மற்றொரு நண்பரான வம்சியிடமும் அபிநய் பகிர்ந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 23 அன்று வம்சி மற்றும் அபிநய் ஆகிய இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து, அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த அராஜகத்தால் கடும் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், துணிச்சலுடன் ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், உடனடியாக நடவடிக்கை எடுத்து வாலிபர்கள் இருவரையும் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in