வெள்ளத்தில் தவித்த பெண்ணுக்கு உதவிய வாலிபர்..! இளைஞரின் நிதானமான மனிதநேய செயலுக்கு… இணையத்தில் குவியும் பாராட்டுகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெள்ளத்தில் தவித்த பெண்ணுக்கு உதவிய வாலிபர்..! இளைஞரின் நிதானமான மனிதநேய செயலுக்கு… இணையத்தில் குவியும் பாராட்டுகள்..!!

Published

on

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் மழையினால் வெள்ளம் சூழ்ந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சௌரப் பார்கவா என்ற இளைஞர், ஒரு பெண் தனது ஸ்கூட்டருடன் வெள்ள நீரில் தவித்துக்கொண்டிருப்பதைக் கவனித்தார். அந்தப் பெண்ணின் கால் ஏதோ ஒன்றில் சிக்கிக் கொண்டதால், அவரால் ஸ்கூட்டரையும் நகர்த்த முடியாமல், அங்கிருந்து நகரவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த சௌரப், உடனே வண்டியை நிறுத்திவிட்டு அந்தப் பெண்ணுக்கு உதவ முன்வந்தார்.

அபாயகரமான அந்தச் சூழ்நிலையிலும் சௌரப் மிகவும் பதற்றப்படாமல், அந்தப் பெண்ணை அமைதியாக இருக்கும்படி கூறினார். பின்னர், அவரது கால் சிக்கியிருந்த பொருளைப் பொறுமையாக அகற்றி அவரை முதலில் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பினார். அதன் பிறகு, வெள்ள நீரில் நின்ற அந்த ஸ்கூட்டரைத் தள்ளிச் சென்று சாலையோரமாகப் பாதுகாப்பாக நிறுத்தினார். அந்தப் பெண்ணிற்கு ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதையும் அன்போடு விசாரித்து உறுதி செய்துகொண்டார்.

Advertisement

https://www.instagram.com/reel/Da4iFTLtaoW/?utm_source=ig_web_button_share_sheet

இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை சௌரப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “உங்களால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுங்கள்!” என்று பதிவிட்டிருந்தார். இக்கட்டான சூழ்நிலையில் சௌரப் காட்டிய நிதானமும், சக மனிதர் மீதான அக்கறையும் சமூக ஊடகங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஆபத்துக் காலத்தில் பதற்றமின்றி அவர் செய்த இந்த உதவி, மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இணையவாசிகள் பலரும் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in