உயிரோடு விட்டா உலகத்துக்கே ஆபத்து..! டொனால்ட் ட்ரம்பிற்கு விழுந்த மரண ஸ்கெட்ச்… சன்மானம் இத்தனை கோடியா…? பகீர் கிளப்பும் ஈராக் ஆயுதக்குழு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உயிரோடு விட்டா உலகத்துக்கே ஆபத்து..! டொனால்ட் ட்ரம்பிற்கு விழுந்த மரண ஸ்கெட்ச்… சன்மானம் இத்தனை கோடியா…? பகீர் கிளப்பும் ஈராக் ஆயுதக்குழு..!!

Published

on

ஈரானிய ஜெனரல் காசெம் சுலைமானி மற்றும் ஈராக்கிய போராளிக் குழுத் தலைவர் அபு மஹ்தி அல்-முஹந்திஸ் ஆகியோர் கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.இதற்குப் பழிவாங்கும் விதமாக, ஈரானின் ஆதரவு பெற்ற “ஈராக்கில் இஸ்லாமிய எதிர்ப்பு” என்ற போராளிக் குழு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைக் கொல்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் சன்மானம் வழங்கப்படும் என இன்று அறிவித்துள்ளது. ட்ரம்பை ஒரு கொலையாளி என்று சாடியுள்ள இக்குழு, ஈராக், சிரியா மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஏற்கனவே பல்வேறு ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சமீபத்தில் வெள்ளை மாளிகையில் ஈராக் பிரதமர் காசிம் அல்-ஜைதியை, அதிபர் ட்ரம்ப் சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பின் போது, கடந்த 2020-ல் சுலைமானி மற்றும் முஹந்திஸைக் கொன்ற தனது முந்தைய பதவிக்கால நடவடிக்கையை ட்ரம்ப் பகிரங்கமாக நியாயப்படுத்திப் பேசினார். தான் அந்தப் படுகொலையைச் செய்யாமல் இருந்திருந்தால் இன்றைய நிலைமையே வேறுவிதமாக இருந்திருக்கும் என்றும், ஈரானிய தலைவர்களே சுலைமானிக்கு பயந்திருந்தார்கள் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டதைத் தொடர்ந்தே, ஈராக்கிய குழுவின் இந்தத் திடீர் பரிசுத்தொகை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய ஏற்கனவே பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, 2024 அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, பென்சில்வேனியாவில் நடந்த கூட்டத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டதில் குண்டு ட்ரம்பின் காதை உரசிச் சென்று அவர் உயிர் தப்பினார்; அதன் பின்னர் புளோரிடா கோல்ஃப் மைதானத்திற்கு அருகிலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சுலைமானியின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில், ஈரானுடன் தொடர்புடைய ஒரு குழுவே ட்ரம்பைக் கொலை செய்யத் தொடர்ந்து முயன்று வருவதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தற்போதைய இந்த அறிவிப்பு அமெரிக்கா-ஈரான் இடையே மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in