LATEST NEWS
அடுத்த சர்ச்சை..! தன் நிழலாக இருக்கும் பாதுகாவலருக்கு பதவியை தூக்கிக் கொடுக்கும் CM விஜய்? தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!
முதல்வர் விஜய் தனது நீண்ட காலத் தனிப்பட்ட பாதுகாவலரான நயிம் மூசாவுக்கு அரசு தரப்பில் பாதுகாப்புத் தொடர்பான முக்கியப் பதவி ஒன்றை வழங்க முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக கட்சியின் ஆரம்பக் காலம் மற்றும் கடந்த தேர்தல் பிரசாரங்கள் முதலே விஜய்யின் நிழல் போல உடனிருந்து பாதுகாப்புப் பணிகளைக் கவனித்து வந்தவர் மூசா. இவரின் தீவிர விசுவாசத்தைக் கருத்தில் கொண்டு, அவருக்கான ஒரு புதிய பாதுகாப்புப் பதவியைத் தயார் செய்ய முதல்வர் தரப்பில் அதற்கான ஏற்பாடுகள் ரகசியமாக நடந்து வருவதாகச் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
இருப்பினும், சமீபத்தில் முதல்வரின் ஆஸ்தான ஜோதிடருக்கு முக்கிய அரசுப் பதவி வழங்கப்பட்ட விவகாரம் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்டுள்ள அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ளும் விதமாக, நயிம் மூசாவுக்குப் பாதுகாப்புப் பதவி வழங்கப்பட்டாலும் அதற்கான அரசாணை அதிகாரப்பூர்வமாக வெளியாகுமா என்பது சந்தேகம் தான் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. வெளியில் தெரியாமல் உள்கட்சி அல்லது முதல்வரின் பிரத்யேக பாதுகாப்புப் பிரிவின் கீழ் இந்த நியமனம் அமைய வாய்ப்புள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
