“கல்யாணத்துக்கு ஆசைப்பட்டு உசுர விட்றாதீங்க” பணம் கொடுத்து பெண் வாங்கினால் தூக்கு… சீனர்களை உலுக்கிய வங்கதேசத்தின் பகீர் எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கல்யாணத்துக்கு ஆசைப்பட்டு உசுர விட்றாதீங்க” பணம் கொடுத்து பெண் வாங்கினால் தூக்கு… சீனர்களை உலுக்கிய வங்கதேசத்தின் பகீர் எச்சரிக்கை..!!

Published

on

சீனாவில் திருமண வயதை எட்டிய பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், அங்குள்ள ஆண்கள் வெளிநாட்டுப் பெண்களைப் பணம் கொடுத்து வாங்கித் திருமணம் செய்யும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, சில சட்டவிரோத மேட்ரிமோனி நிறுவனங்கள் வெளிநாட்டுப் பெண்களைக் கடத்தி வந்து சீன ஆண்களுக்கு விற்பனை செய்யும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சட்டவிரோதத் திருமணங்களைத் தடுக்கும் பொருட்டு, வங்கதேச தூதரகம் சீன ஆண்களுக்குக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. பெண்களைக் கடத்தி வந்து பணம் கொடுத்து வாங்கும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், வங்கதேச சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்கப்படும் என்று தூதரகம் எச்சரித்துள்ளதுடன், “கல்யாணத்துக்கு ஆசைப்பட்டு உசுர விட்றாதீங்க” என்றும் அதில் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in