CRIME
“நீ எனக்கு இல்லனா யாருக்கும் இல்ல!”.. திருமணமான காதலனின் காதல் வெறி.. நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் பிரம்மபுரி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கணேஷ்புரியில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த 24 வயது இளம்பெண்ணை கைஃபி என்ற நபர் நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோழியின் பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை வழிமறித்த கைஃபி, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அப்பெண் மறுப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அவன், தன் கைத்துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காதுக்கு அருகே குண்டு பாய்ந்து படுகாயமடைந்த அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கனவே திருமணமான கைஃபி, அந்தப் பெண்ணை நீண்ட நாட்களாக ஒருதலைக் காதலால் பின்தொடர்ந்து மிரட்டி வந்ததும், பயத்தின் காரணமாகப் பெண் வீட்டார் இதுகுறித்து முன்பு புகார் அளிக்கவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. “நீ எனக்குச் சொந்தமில்லை என்றால் வேறு யாருக்கும் சொந்தமாக முடியாது” என்று சுட்ட பிறகும் கத்தி மிரட்டிவிட்டுத் தப்பி ஓடிய அந்த நபரை, கொலை முயற்சி வழக்கின் கீழ் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒருதலைக் காதலின் உச்சக்கட்ட வெறியால் நடுரோட்டில் அரங்கேறிய இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
