LATEST NEWS
வி தி லீடர்ஸ் அமைப்பின் புதிய வியூகம்…! ஜூலை 1 முதல் அண்ணாமலையின் அடுத்த கட்ட பிளான்…. வெளியான பரபரப்பு தகவல்…!!
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகிய பிறகு ‘வி தி லீடர்ஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் மூலம் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகக் களப்பணிகள் தொடங்கப்பட உள்ளதாக அவர் வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.
இதன்படி, ஜூலை மாதம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வையும், ஆகஸ்ட் மாதம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மையமாகக் கொண்டு தன்னார்வலர்கள் களம் இறங்கவுள்ளனர். மேலும், கோவையில் அப்துல்கலாம் பெயரிலான அரசியல் பயிற்சி மையம் ஆகஸ்ட் 15 அன்று திறக்கப்பட உள்ளதாகவும், ஜூலை முதல் வாரத்தில் இதற்கான பிரத்யேக மொபைல் செயலி அறிமுகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பைத் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி அரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் பூர்வாங்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். தங்களது அமைப்பு எந்தக் கட்சிக்கும் பினாமி அல்ல என்றும், எதிர்காலத்தில் உள்ளாட்சி, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் நேரடியாகப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசின் சில திட்டங்களை வரவேற்பதாகக் கூறிய அவர், தவெக-விற்கும் திராவிட கட்சிகளுக்கும் பெரிய அளவில் வேறுபாடு தெரியவில்லை என்றும் விமர்சித்துள்ளார். போதை ஒழிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வரும் ஜூலை 19 அன்று திருச்செந்தூரில் நடக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்க உள்ளார்.
