LATEST NEWS
அலறிய நண்பர்கள்… பாறை மேல் அமர்ந்து வீடியோ எடுத்தபோதே ஆழக்கடலுக்குள் மறைந்த வாலிபர்… சோகத்தில் முடிந்த ட்ரிப்… பதைபதைக்கும் சம்பவம்…!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சஹாஸ் மசாலி என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் கோவாவிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரைப் பகுதியில் போலீசாரின் கடுமையான எச்சரிக்கையையும் மீறி, ஆபத்தான பாறையின் மீது ஏறி நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகப் பாய்ந்து வந்த ராட்சத அலை, நண்பர்கள் கண் முன்னே சஹாஸை கடலுக்குள் இழுத்துச் சென்றது. காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடியும் அவரை உயிரோடு மீட்க முடியாமல், இறுதியில் அவரது சடலம் மட்டுமே கண்டெடுக்கப்பட்டது.
பருவமழை காலங்களில் கடல் அலைகள் வழக்கத்தை விட அதிக வேகத்துடன் பாய்ந்து வரும் என்பதால் கடலில் இறங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கடலில் சிக்கிக் கொள்ளும்போது ஏற்படும் பயத்தால் மூச்சுக்காற்றுக்காக வாயைத் திறக்கும்போது, தண்ணீருடன் மணல் துகள்களும் நுரையீரலுக்குள் சென்று 2 நிமிடங்களில் மரணத்தை ஏற்படுத்திவிடும். எனவே, சுற்றுலா பயணிகள் கடலோரப் பகுதிகளில் விளையாடும்போதும், புகைப்படம் எடுக்கும்போதும் அதீத கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
