LATEST NEWS
“எனக்கு இந்த கெட்டப்பழக்கம் இருக்கு”….. ஆனா நீங்க அப்படி பண்ணாதீங்க…. பிரபல தமிழ் நடிகர் ஓப்பன் டாக்…..!!!!
ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி தனக்கு குடிப்பழக்கம் இருப்பதை வெளிப்படையாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாக நடித்து அசத்தி வருகிறார்.
மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாகவும், தற்போது விக்ரம் திரைப்படத்தில் கமலஹாசனுக்கு வில்லனாகவும் நடித்து அசத்தியுள்ளார். இதை தொடர்ந்து பாலிவுட்டில் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து வருகிறார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இவர் மாணவர்களிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய இவர் “இந்த உலகில் யாரும் யாரிடம் தோற்றுப் போவதில்லை. யாரும் யாரையும் வெற்றி கொள்வது இல்லை. அந்த சமயத்தில் நடக்கும் ஒரு சிறிய நாடகம் அது. அறிவை மேம்படுத்துவதற்கு முக்கியமானது கேட்பது. பிறர் பேசுவதை முதலில் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். அதை தான் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றது. பள்ளி கல்லூரிகளில் படிக்கும் பாடங்கள் எல்லாம் யாரோ ஒருவர் படித்து புரிந்து கொண்டு அதை மற்றவர்களுக்கு பாடமாக மாற்றியது .
அவ்வாறு நாம் படிக்கும் பாடங்களை நாம் அறிவைக் கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும். அதற்கு பெயர் பகுத்தறிவு என்று தெரிவித்தார். மேலும் குடிப்பது நல்ல பழக்கம் இல்லை. ஆனால் எனக்கு குடிப்பழக்கம் உண்டு. கருத்தை பாருங்கள், கருத்து சொன்னவர்களை பார்க்காதீர்கள். கருத்து தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம் அவ்வளவுதான். யாரும் யாரிடமும் தோல்வி அடைவதும் இல்லை. வெற்றி பெறுவதும் இல்லை என்று அவர் பேசினார்.
