CRIME
அய்யோ கடவுளே.. தம்பதி மற்றும் குழந்தையை துடிக்க துடிக்க காவலாளிகள் செய்த கொடூர காரியம்… வெவ்வேறு இடங்களில் வீசப்பட்ட உடல்கள்.. சென்னையை உலுக்கிய முக்கொலையின் பகீர் பின்னணி..!!
சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தம்பதி மற்றும் அவர்களது இரண்டு வயதுக் குழந்தை கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சென்னை மகளிர் நீதிமன்றத்தில் தற்பொழுது வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி 2026-ல் நடந்த இந்த அதிர்ச்சியூட்டும் முக்கொலை தொடர்பாக, பீகாரைச் சேர்ந்த சத்யேந்திரன் என்ற சந்தோஷ் குமார் (30), லலித் யாதவ் (40), மற்றும் விகாஸ் குமார் (24) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விபரீத சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த கௌரவ் குமார் (25), அவரது மனைவி முனிதாகுமாரி (20), மற்றும் அவர்களது இரண்டு வயது மகன் பிர்மணி குமார் ஆகியோர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
வேலை தேடி சென்னை வந்த கௌரவ் குமார் குடும்பத்தினருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் பகல் நேரக் காவலாளியாகப் பணிபுரிந்த சத்யேந்திரன், அவர்களை ஜனவரி 24 அன்று கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அன்று இரவு சத்யேந்திரன், அந்தப் பாலிடெக்னிக் கல்லூரியின் இரவு நேரக் காவலாளியான லலித் மற்றும் கொட்டிவாக்கத்தில் காவலாளியாக இருந்த விகாஸ் ஆகிய மூவரும் கௌரவ் குமாருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், போதை தலைக்கேறிய அந்த மூன்று காவலாளிகளும் சேர்ந்து கௌரவ் குமார், அவரது மனைவி மற்றும் குழந்தையை இரும்புக்கம்பி மற்றும் கைகளால் மிகக் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்துள்ளனர்.
பின்னர், கொலையாளிகள் மூவரும் உடல்களை மூட்டைகளில் கட்டி வெவ்வேறு இடங்களில் வீசிச் சென்றுள்ளனர். ஜனவரி 26 அன்று இந்திரா நகர் பகுதியில் ஒரு மூட்டையிலிருந்து இரத்தம் கசிவதைக் கண்ட பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், அடையாறு காவல்துறையினர் கௌரவின் உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். அதன்பின்னர் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், குழந்தையின் உடல் மத்திய கைலாஷ் அருகேயுள்ள பக்கிங்காம் கால்வாயிலிருந்தும், பெண்ணின் உடல் பெருங்குடி குப்பைக்கிடங்கிலிருந்தும் மீட்கப்பட்டன. ஜனவரி 29 அன்று கைது செய்யப்பட்ட இந்த மூவர் மீதும் குண்டாஸ் சட்டம் பாய்ந்த நிலையில், பின்னர் அது ரத்து செய்யப்பட்டாலும் கொலை வழக்கில் இவர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு தொடர்ந்து சிறையிலேயே உள்ளனர்.
