LATEST NEWS
“அய்யோ கடவுளே..” கொசுவை விரட்ட பற்றவைத்த ஊதுபத்தி.. தூக்கத்திலேயே கருகிப்போன 75 வயது முதியவர்..! நடுங்க வைக்கும் சோக சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் தாகூர்கஞ்ச் பகுதியில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பாபா ஹசாரா பாக் பகுதியில் வசித்து வந்த 75 வயது முதியவர் முகமது அத்தீக், தனது வீட்டில் கொசுவை விரட்டுவதற்காக ஊதுபத்தி பற்ற வைத்துள்ளார். அந்த அகர்பத்தியில் இருந்து எதிர்பாராதவிதமாக தீப்பற்றி, வீடு முழுவதும் பரவியுள்ளது.
தீ மளமளவென்று பரவியதால், தூங்கிக் கொண்டிருந்த முதியவருக்கு எழுந்து தப்பிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் அங்கேயே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். முதியவர் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது. வீட்டின் உள்ளே இருந்து புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக பூட்டியிருந்த கேட்டை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் முதியவர் மூச்சுத்திணறி மற்றும் தீயில் கருகி உயிரிழந்திருந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த முதியவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உறவினர்களின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அருகில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தி வருவதுடன், விபத்துக்கான உண்மையான காரணங்கள் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
