LATEST NEWS
“ஆலோசனைலாம் இல்ல.. சும்மா டிவி பார்த்துட்டு பேசிட்டு இருந்தோம்..” நிருபர்களின் கேள்விக்கு துரைமுருகன் கொடுத்த நக்கல் பதில்..!!
கொளத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மரணம் அடைந்ததால், இந்தத் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க இருக்கிறது. இந்தத் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பம் என்று அக்கட்சியின் எம்.பி. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேட்டி அளித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று வருகை தந்தனர். அவர்கள் கொளத்தூர் உள்பட 6 தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது. இதுபற்றி துரைமுருகனிடம் கேட்டபோது, “ஆலோசனைக் கூட்டம் ஒன்றும் நடைபெறவில்லை. நாங்கள் டி.வி. பார்த்துக்கொண்டு சும்மா பேசிக் கொண்டிருந்தோம்” என்று கிண்டலாகக் கூறினார்.
தொடர்ந்து அவரிடம், “கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பது பற்றி பேசினீர்களா? அவர் போட்டியிடுவாரா?” என்று நிருபர்கள் கேட்டதற்கு, “அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் பேசவில்லை” என்று பதில் அளித்தார். அண்ணா அறிவாலயத்தை விட்டு மு.க.ஸ்டாலின் புறப்பட்டபோது, அவரிடம் இதே கேள்விகளை நிருபர்கள் எழுப்பினார்கள்; ஆனால் அவர் பதில் எதுவும் சொல்லாமல் புறப்பட்டுச் சென்றார்.
