உடனே செக் பண்ணுங்க… ஆதார் மற்றும் வங்கி கணக்கு இருந்தா போதும்… ஆட்டோமேட்டிக்காக கிரெடிட் ஆகும் பிஎஃப் பணம்.. மத்திய அரசு கொண்டு வந்த சூப்பர் அப்டேட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உடனே செக் பண்ணுங்க… ஆதார் மற்றும் வங்கி கணக்கு இருந்தா போதும்… ஆட்டோமேட்டிக்காக கிரெடிட் ஆகும் பிஎஃப் பணம்.. மத்திய அரசு கொண்டு வந்த சூப்பர் அப்டேட்..!!

Published

on

தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் தனது உறுப்பினர்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையில், பழைய பிஎஃப் கணக்குகளில் உள்ள ரூ.1,000 வரையிலான சிறிய தொகையை ஊழியர்கள் தனியாக விண்ணப்பிக்காமலேயே நேரடியாகப் பெறும் புதிய டிஜிட்டல் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய தொழிலாளர் நல மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இத்திட்டத்தைத் முறைப்படி தொடங்கி வைத்துள்ளார்.

இதற்கு முன்பு, பழைய அல்லது செயலற்ற பிஎஃப் கணக்குகளில் விடுபட்ட சிறு தொகைகளைத் திரும்பப் பெறுவதற்கு ஊழியர்கள் பல்வேறு படிவங்களை நிரப்பி, ஆன்லைனிலோ அல்லது அலுவலகங்களிலோ விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தானியங்கிப் பணப் பரிமாற்ற வசதி மூலம் ஊழியர்களின் அலைச்சல்களும் தேவையற்ற காலதாமதங்களும் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளன.

Advertisement

இப்புதிய திட்டத்தின் கீழ், நீண்ட நாட்களாகச் செயல்படாமல் இருக்கும் பிஎஃப் கணக்குகளில் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு விபரங்கள் முறையாகச் சரிபார்க்கப்பட்டிருந்தால், அந்தப் பணம் ஊழியர்களின் கணக்குகளுக்குத் தானாகவே திருப்பி அனுப்பப்படும். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தற்காலிக மற்றும் முறைசாரா ஊழியர்கள் எந்தவிதத் தடையுமின்றி தங்களின் சிறு சேமிப்புத் தொகையை உடனடியாகப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in