LATEST NEWS
FLASH : 24 மணி நேர வரம்பைத் தாண்டி ஒருவரை காவலில் வைக்கக்கூடாது.. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!
ஒருவரை கைது செய்த 24 மணி நேர வரம்பைத் தாண்டி போலீசார் தங்களது காவலில் வைத்திருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. ஒரு நபரைக் காவலில் எடுத்த நேரத்திலிருந்தே இந்த 24 மணி நேரக் கணக்கு தொடங்கும் என்றும், மாறாகக் கைதை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்த நேரத்திலிருந்து இதனைக் கணக்கிடக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
குறிப்பிட்ட அந்த 24 மணி நேர வரம்பிற்குள் சம்பந்தப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் தவறினால், அவரை உடனடியாகப் போலீசார் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது. காவல்துறையினரின் சட்டவிரோதக் காவல் மற்றும் மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் வகையில் இந்த முக்கியத் தீர்ப்பு அமைந்துள்ளது.
