CRIME
அய்யோ கடவுளே.. விவசாய நிலத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமி.. குற்றத்தை மறைக்க காம மிருகங்ககள் செய்த கொடூர காரியம்.. திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பயிரோசாபாத் மாவட்டத்தின் கெர்கர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், தலித் சமூகத்தைச் சேர்ந்த மைனர் சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாகக் கழுத்தறுத்துக் கொலை செய்ய முயன்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த அக்டோபர் 31 மாலை வீட்டை விட்டு வெளியேறிய அச்சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்துள்ளனர். மறுநாள் நவம்பர் 1 காலை, அருகில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் அச்சிறுமி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சுயநினைவின்றி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் சிறுமியைச் சீரழித்துவிட்டு, தங்களின் கொடூரக் குற்றத்தை மறைப்பதற்காக அவளது தொண்டையை நெரித்துக் கழுத்தை அறுத்துக்கொலை செய்ய முயன்றுள்ளதாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தற்போது அந்தச் சிறுமி ஆக்ராவில் உள்ள எஸ்.என். மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவளால் இன்னும் பேச முடியாத நிலை நீடிப்பதாகவும் அவளது குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட அனைத்துக் குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து விரைவாக நீதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உயர்தர மருத்துவச் சிகிச்சை அளிக்கவும், தங்களது குடும்பத்திற்குப் பாதுகாப்பு மற்றும் தகுந்த நிதி உதவி வழங்கவும் உத்தரப் பிரதேச அரசு முன்வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
