LATEST NEWS
மக்களே அலெர்ட்..! “வருகிறது புயல்” வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!!
வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 26-ஆம் தேதி புயலாக வலுப்பெறக் கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
இந்த புதிய புயல் உருவானால், அதற்கு வங்கதேசம் பரிந்துரைத்துள்ள ‘அர்னாப்’ (ARNAB) என்ற பெயர் சூட்டப்படும். மேலும், இதுவே நடப்பாண்டில் வங்கக் கடலில் உருவாகும் முதல் புயல் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கடலோர மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
