LATEST NEWS
“லாரி தான் எங்கள காப்பாத்துச்சு” அந்த நேரத்துல தப்பிச்சு ஓட முடியல… வயநாடு நிலச்சரிவில் உயிர் தப்பிய பெண்ணின் உருக்கமான வாக்குமூலம்..!!
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய பெண் ஒருவர், தான் எதிர்கொண்ட அந்த மரண பயமுறுத்தும் தருணங்களை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். நிலச்சரிவு ஏற்பட்ட அந்த நேரத்துல தங்களால் தப்பித்து ஓடக்கூட முடியவில்லை என்று அவர் அந்த கோர சம்பவத்தை விவரித்தார்.
திடீரென திரும்பிப் பார்த்தபோது, பெரும் பாறைகளும் மண்ணும் தங்களுக்கு மிக அருகில் சரிந்து வந்து கொண்டிருந்ததாக அவர் கூறினார். அந்த மரணப் பிடியில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவித்தபோது, சாலையில் நின்றிருந்த ஒரு லாரி தான் அவர்களுக்கு அரணாக அமைந்து, சரிந்து வந்த மண்ணைத் தடுத்து நிறுத்தி அவர்களது உயிரைக் காப்பாற்றியுள்ளது.
இந்த கோர விபத்தில் இருந்து தப்பித்துவிட்ட போதிலும், அந்த நொடிகளின் கொடூர நினைவுகள் இன்னும் தங்களை விட்டு மறையவில்லை என்று அவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். அந்த திகில் தருணங்களை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுவதாகவும், இந்த சோகத்தில் இருந்து தங்களால் இன்னும் மீள முடியவில்லை என்றும் அவர்கள் கண்ணீர் மல்கக் கூறினர்.
