LATEST NEWS
குஷாயோ குஷி..! மருத்துவ சிகிச்சை பெற ஆதார் கட்டாயமில்லை… அமைச்சர் அமைச்சர் அருண்ராஜ்..!!
மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் பொதுமக்களின் மருத்துவச் சந்தேகங்களுக்குத் தீர்வுகாணும் வகையில் ‘நலம் ஏ.ஐ.’ (Nalam AI) என்ற புதிய வாட்ஸ்அப் சேட்போட் சேவையைத் தொடங்கி வைத்துள்ளார். பொதுமக்கள் தங்களின் வாட்ஸ்அப் செயலி மூலம் 9619222999 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகளையும் தகவல்களையும் எளிதாகப் பெற முடியும். இந்த நவீனத் தொழில்நுட்ப வசதி மூலம் ஆரம்பக் கட்ட சுகாதார வழிகாட்டுதல்களை மக்கள் தங்களின் மொபைல் மூலமாகவே விரைவாகப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் புதிய நடைமுறைகள் குறித்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அரசு மருத்துவமனைகளில் மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கு ஆதார் அட்டை இல்லையென்றாலும் யாருக்கும் சிகிச்சை மறுக்கப்படாது என்றும், அவசரக் காலங்களில் மக்கள் எந்தவித அவதியுமின்றி தாராளமாகச் சிகிச்சை பெறலாம் என்றும் அவர் திட்டவட்டமாக உறுதி அளித்துள்ளார்.
