LATEST NEWS
பசி வந்தா பத்தும் பறந்துடும்…! சமோசாவுக்காக ‘பிரேக்’ போட்ட லோகோ பைலட்..! வைரல் வீடியோவின் பின்னணி என்ன..?!
மத்தியப் பிரதேசத்தில் சமோசா வாங்குவதற்காக லோகோ பைலட் ஒருவர் ரெயிலை நடுவழியில் நிறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவிற்கு, ரெயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் – மௌ ரெயில்வே பிரிவில் உள்ள ராவ் பகுதியில், ரங்வாசா சாலைக்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இணையத்தில் வைரலான அந்த வீடியோவில், லோகோ பைலட் ரெயிலில் இருந்து கீழே இறங்கி, அருகில் உள்ள ஒரு கடையில் இருந்து கவரில் சமோசாவை வாங்கிக்கொண்டு மீண்டும் ரெயிலில் ஏறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும், சமோசா வாங்குவதற்காக லோகோ பைலட் பயணிகள் ரெயிலை நடுவழியில் நிறுத்தி, பயணிகளுக்கு தாமதத்தை ஏற்படுத்தியதோடு ரெயில்வே விதிகளையும் மீறிவிட்டார் என்று கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறான புரிதல் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
ரெயில்வே அதிகாரிகள் தரப்பில், அது பயணிகள் ரெயில் அல்ல, ஒரு சரக்கு ரெயில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அந்த குறிப்பிட்ட ரெயில் பாதையில் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அந்த சரக்கு ரெயில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதே இடத்தில் நிறுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ரெயில் உடனடியாக நகரப் போவதில்லை என்பதை உறுதி செய்துகொண்ட பின்னரே, லோகோ பைலட் கீழே இறங்கி அருகில் இருந்த கடையில் சமோசா வாங்கி வந்துள்ளார் என்றும், இதன் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதாகவும் அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள
