LATEST NEWS
கிளைமாக்ஸ் ட்விஸ்ட்..! வேலை மோசடி வழக்கில் சிவசங்கரை சிக்க வைக்கும் வாக்குமூலம்..!!
போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள இளஞ்செழியன் என்பவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில், இந்த மோசடியில் சிவசங்கருக்கும் தொடர்பு உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், போலீஸ் விசாரணையின் போது, சிவசங்கரின் வலதுகரமாக இருந்த நபர்களிடம்தான் தான் பணத்தைக் கொடுத்ததாக இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளஞ்செழியனுக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று சிவசங்கர் தரப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கைது செய்யப்பட்டுள்ள இளஞ்செழியன் அளித்துள்ள இந்த அதிரடி வாக்குமூலம், சிவசங்கருக்குப் பெரும் சட்ட ரீதியான சிக்கலையும் நெருக்கடியையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
