நாடு விட்டு நாடு கடந்து வந்து..! தந்தையின் இறுதிச்சடங்கை ‘வீடியோ கால்’ மூலமாக பார்த்த மகன்! ஜன்னல் வழியாக பார்த்து கதறிய சோகம்!.. ஏன் இந்த கொடுமை தெரியுமா..? - cinefeeds
Connect with us

Uncategorized

நாடு விட்டு நாடு கடந்து வந்து..! தந்தையின் இறுதிச்சடங்கை ‘வீடியோ கால்’ மூலமாக பார்த்த மகன்! ஜன்னல் வழியாக பார்த்து கதறிய சோகம்!.. ஏன் இந்த கொடுமை தெரியுமா..?

Published

on

கேரள மாநிலத்தைச் சேர்ந்த லினோ அபெல் என்ற வாலிபர், இவர் கத்தார் நாட்டில் வேலை செய்து வருகிறார். தீடிர் என்று தந்தை எதிர்பாராத விதமாக கீழே விழுந்து அடிபட்டு சிகிச்சை பெற்று வருகிறார் தனது தந்தையைக் காண, வெளிநாட்டில் இருந்து கடந்த 8ம் தேதி அவசரமாக கிளம்பி வந்துள்ளார்

பின்னர் விமான நிலையம் வந்திறங்கிய போது லினோவுக்கு லேசான இருமல் இருந்துள்ளது. இதனால், கொரோனா அச்சுறுத்தல் இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் தாமாக முன்வந்து மருத்துவ அதிகாரிகளை சந்தித்துள்ளார், பின்பு அவரை கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வந்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அதே மருத்துவமனையில் உடல் நிலை பத்திக்கப்பட்ட தந்தையும் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு கட்டத்தில் அபெலின் தந்தை உடல்நலம் மிகவும் மோசமடைந்து கடந்த 9ம் தேதி உயிரிழந்த்தார்.

Advertisement

ஒரே மருத்துவமனையில் ஒரே மருத்துவ மனையில் இருந்த போதிலும், கொரோனா அறிகுறியால் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால், தனது தந்தையின் உடலை நேரில் பார்க்க முடியாத கொடுமை அபெலினுக்கு ஏற்பட்டது. அதன் பின், மருத்துவமனையிலிருந்து தனது தந்தையின் சவத்தை ஆம்புலன்ஸில் செல்வதை மருத்துவமனை ஜன்னல் வழியாக பார்த்து கண்ணீர் வடித்தார், லினோ அபெல். இறுதியாக, செல் போன் வீடியோ கால் மூலமாக தனது தந்தையின் இறுதிச்சடங்கைப் பார்த்து அவர் துடித்துப் போன சம்பவம் பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, லினோ அபெலிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரியில் கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனை கண்ட லனோ அபெல் தந்தைக்காக நாடு நாடு விட்டு நாடு வந்தும் அவரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை என்று மிகுந்த மனஉளைச்சல் ஆளாகி உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in