வெளிநாட்டில் கொ ரோ னாவால் தொழில் முடங்கி ஊர் திரும்பவிருந்த மூன்று இளைஞர்கள்! பெரும் கோடீஸ்வரர்களாக மாறிய ஆ ச்சரியம் - cinefeeds
Connect with us

Uncategorized

வெளிநாட்டில் கொ ரோ னாவால் தொழில் முடங்கி ஊர் திரும்பவிருந்த மூன்று இளைஞர்கள்! பெரும் கோடீஸ்வரர்களாக மாறிய ஆ ச்சரியம்

Published

on

துபாயில் பணிபுரிந்த மூன்று கேரள இளைஞர்களின் தொழில் கொரோனா காரணமாக முடங்கிய நிலையில் ஊருக்கே திரும்பலாம் என கிளம்பிய போது பெரும் கோடீஸ்வர்ர்களாக மாறியுள்ளனர். கேரளாவை சேர்ந்த Jijesh Corothan, Shah Jahan Kuttikattil, Shanoj Balakrishnan ஆகிய மூவரும் துபாயில் தங்கி கார் ஓட்டுனர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடனுக்கு மூவரும் சேர்ந்து சொகுசு காரை வாங்கி சில நாட்களாக ஓட்டி வந்தார்கள்.


இந்த சூழலில் கொரோனா அச்சத்தால் துபாயில் சுற்றுலா துறை முழுவதுமாக முடங்கியது. இதனால் கார் மூலம் வரும் வருமானம் நின்றது, மேலும் கடன் தவணையை செலுத்த முடியாமல் மூன்று நண்பர்களும் அவதிப்பட்டனர். இதையடுத்து காரை விற்றுவிட்டு கடனை அடைத்து சொந்த ஊருக்கே சென்றுவிடலாம் என முடிவெடுத்த மூவரும் அதற்காக நபர் ஒருவரை சந்திக்க சென்றனர். அப்போது வந்த ஒரு போன் கால் Jijesh Corothan, Shah Jahan Kuttikattil, Shanoj Balakrishnan வாழ்க்கையை மாற்றியுள்ளது.

அதாவது மூவரும் வாங்கிய லொட்டரி சீட்டுக்கு ரூ 41 கோடி பரிசு விழுந்த தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து Jijesh கூறுகையில், கடன் தொகையை கூட செலுத்த முடியாமல் சிரமத்தில் இருந்த போது கேரளாவுக்கே திரும்ப முடிவு செய்தோம், அந்த சமயத்தில் இவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் அடித்தது தெரியவந்தது. மூன்று பேரும் சேர்ந்து லொட்டரி டிக்கெட் வாங்கியதால் பரிசு தொகையை பகிர்ந்து கொள்கிறோம். இனி எங்கள் தொழிலுக்கு பிரச்சனையில்லை என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in