தளபதி டூ மாண்புமிகு முதல்வர்..! அரசு அதிகாரிகளுடன் ஜனநாயகன் படம் பார்த்த முதல்வர் விஜய்..!! – cinefeeds
Connect with us

Uncategorized

தளபதி டூ மாண்புமிகு முதல்வர்..! அரசு அதிகாரிகளுடன் ஜனநாயகன் படம் பார்த்த முதல்வர் விஜய்..!!

Published

on

தமிழக முதல்வரும் பிரபல நடிகருமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள தாகூர் திரைப்பட அரங்கில் சிறப்புத் திரையிடல் நடைபெற்றது. ஹெச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை முதலமைச்சர் விஜய், அரசு தலைமைச் செயலக அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் இணைந்து நேரில் கண்டு களித்தார்.

விஜய்யின் திரைப் பயணத்தில் இதுவே கடைசிப் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. வழக்கமாகத் திரையில் தோன்றும் ‘தளபதி விஜய்’ என்ற பெயருக்குப் பதிலாக, இப்படத்தில் ‘மாண்புமிகு முதலமைச்சர் விஜய்’ என்று பெயர் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, இப்படத்தைக் காண்பதற்காகத் திருப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை அளித்துக் கொண்டாடியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in