“இப்படி ஒரு காதலைப் பார்த்திருக்கவே முடியாது!.. 8 ஆண்டுகளுக்கு முன் இறந்த மனைவிக்காக ஆட்டோ ஓட்டுநர் செய்த நெகிழ்ச்சி காரியம்….. இன்ஸ்டாவை ஆக்கிரமித்த முதியவரின் நெகிழ்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

Uncategorized

“இப்படி ஒரு காதலைப் பார்த்திருக்கவே முடியாது!.. 8 ஆண்டுகளுக்கு முன் இறந்த மனைவிக்காக ஆட்டோ ஓட்டுநர் செய்த நெகிழ்ச்சி காரியம்….. இன்ஸ்டாவை ஆக்கிரமித்த முதியவரின் நெகிழ்ச்சி வீடியோ..!!

Published

on

பெங்களூரு இந்திரா நகரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இயக்கி வரும் ஆட்டோ, சாதாரண வாகனம் அல்ல. அது அவரது மனைவியின் நினைவுகளைச் சுமந்து செல்லும் ஒரு வழிபாட்டுத் தலம். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே இவரது மனைவி இறந்துவிட்ட போதிலும், அந்த முதியவர் தனது காதலைக் கொஞ்சம் கூடக் குறைக்கவில்லை. தினமும் காலையில் ஆட்டோவை எடுப்பதற்கு முன், அதில் வைக்கப்பட்டுள்ள மனைவியின் புகைப்படத்திற்கு அன்போடு மலர்களைச் சூட்டி, வணங்கிய பிறகே பயணத்தைத் தொடங்குகிறார். ஆட்டோ முழுவதையும் மனைவியின் புகைப்படங்களால் அழகாக அலங்கரித்து, மனைவியின் நினைவிடமாகவே அதை மாற்றியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான காட்சியை அசிஷ் மேத்யூ என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பதிவிட, அது தற்போது இணையவாசிகளின் இதயங்களைச் வென்று வைரலாகி வருகிறது.

அதனை தொடர்ந்து மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகள் இருந்தபோதிலும், மனைவி இன்றும் தன்னோடு வாழ்ந்துகொண்டிருப்பதாகவே அவர் நம்புகிறார். தினந்தோறும் ஆட்டோ ஓட்டும்போது சந்திக்கும் புதிய மனிதர்களுடனான உரையாடல், தன் கவலைகளை மறந்து உற்சாகத்துடன் வாழ உதவுவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். நிஜக் காதலுக்குச் சான்றாக இருக்கும் இந்த முதியவரின் அன்பை வியந்து, இணையவாசிகளும் இளம்தலைமுறையினரும் அந்த வீடியோவிற்குப் பெருமளவில் ஆதரவாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in