Uncategorized
சத்தமில்லாமல் வாட்ஸ்அப் கொண்டு வரும் மேஜிக் அப்டேட்.. இனி App-ஐ டவுன்லோட் செய்யவே தேவையில்லை… மாஸ் காட்டும் மெட்டா நிறுவனம்..!!
வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்காக “கெஸ்ட் காலிங்” என்ற புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது. இந்த அம்சத்தின் மூலம், வாட்ஸ்அப் கணக்கு இல்லாத நபர்களும் கூட வாட்ஸ்அப் அழைப்புகளில் எளிதாக இணைந்து பேச முடியும். இதற்காக பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை பதிவிறக்கம் செய்யவோ அல்லது புதிய கணக்கை உருவாக்கவோ தேவையில்லை.
இந்த அம்சம் செயல்பட, வாட்ஸ்அப் பயனர் ஒருவர் தனது ‘அழைப்புகள்’ பகுதியில் இருந்து ஒரு பிரத்யேக அழைப்பு இணைப்பை உருவாக்க வேண்டும். பின்னர், அந்த லிங்க்கை வாட்ஸ்அப் பயன்படுத்தாத நபர்களுக்கு அனுப்ப வேண்டும். வாட்ஸ்அப் கணக்கு இல்லாதவர்கள் அந்த லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம், தங்களின் மொபைல் அல்லது கணினியின் வெப் பிரவுசர் வழியாகவே நேரடியாக வாட்ஸ்அப் அழைப்பில் “கெஸ்ட்” ஆக இணைந்து கொள்ள முடியும்.
தற்போது இந்த அம்சம் உருவாக்கப்படும் கட்டத்தில் உள்ளதாக WABetaInfo தகவல் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் தளம் தங்களின் சேவையை பயன்படுத்தாதவர்களையும் பாதுகாப்பான முறையில் தங்களோடு இணைத்துக் கொள்ள உதவும் வகையில் இந்த புதிய அப்டேட்டை விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
