Uncategorized
சட்டசபை சைகை டூ சதுர்த்தி திருவிழா..! முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் கோட் சூட் அணிந்த விநாயகர்.. இணையத்தில் செம்ம வைரல்..!
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து பல்வேறு புதுமையான வடிவமைப்புகளிலான விநாயகர் சிலைகள் தமிழகத்திற்கு வரத்தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில், முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
சமீபத்தில் சட்டசபைக் கூட்டத்தொடரின் போது, முதலமைச்சர் விஜய் செய்த ஒரு குறிப்பிட்ட சைகை காட்சி இணையத்தில் பயங்கர வைரலானது. தற்போது அந்த சைகையை அப்படியே தத்ரூபமாகப் பிரதிபலிக்கும் வகையிலும், கோட் சூட் அணிந்த கெத்தான தோற்றத்திலும் இந்த விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ள இந்தத் தோற்றம், தற்போது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இருப்பினும், இணையத்தைக் கலக்கி வரும் இந்த விநாயகர் சிலையானது உண்மையில் மண்ணால் நேர்த்தியாகச் செய்யப்பட்ட சிலையா அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் படமா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
