Uncategorized
“ஊழலற்ற ஆட்சின்னு சொன்னீங்களே CM சார்?”.. நகராட்சி நிர்வாகத்தில் அடுத்தடுத்து சிக்கிய அதிகாரிகள்.. விஜய் அதிரடி ஆக்ஷன் எடுப்பாரா?.. பரபரப்பில் தமிழக அரசியல்..!!
அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழலுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்ற கொள்கையோடு செயல்படுவதாகத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், முதலமைச்சர் விஜய்யின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையிலேயே சொத்து வரி விதிப்பு போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகத் தொடர்ந்து புகார்கள் எழுவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்களை லஞ்சம் தரவில்லை என்பதற்காக வாரக்கணக்கில் முடக்கி வைப்பது, வெளிப்படையான நல்லாட்சியை வழங்குவோம் என்ற அரசின் வாக்குறுதிக்கு நேர் எதிரான சூழலையே காட்டுகிறது.
இத்தகைய சூழலில், முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் லஞ்சப் புகாருக்குள்ளாகும் அதிகாரிகள் மீது முதலமைச்சர் விஜய் உடனடியாக கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுப்பாரா என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையை மேலும் முடுக்கிவிட்டு, சிறப்பு வாட்ஸ்அப் உதவி எண் மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனடி லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடத்தி தவறிழைப்பவர்களை சஸ்பெண்ட் செய்வதும், மக்கள் சேவைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வெளிப்படையாக வழங்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதும் மட்டுமே இந்த விவகாரத்தில் முதலமைச்சரின் உண்மையான நடவடிக்கையாக அமையும்.
