Uncategorized
நீட் விவகாரத்தில் பற்றி எரியும் அரசியல் களம்.. ராகுல் கைதான பிறகும் மவுனம் காக்கும் CM விஜய்.. அதிர்ச்சியில் காங்கிரஸார்..!!
டெல்லியில் நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்திப் பிரதமர் இல்லம் அருகே தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, போலீஸாரால் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அரசுக்கும் போலீஸ் நடவடிக்கைக்கும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இருப்பினும், இந்த முக்கிய விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் எந்தவித கண்டனமும் தெரிவிக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருவது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் கைது நடவடிக்கைக்குப் பல தலைவர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், முதலமைச்சர் விஜய்யின் இந்த அமைதி குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
