“இப்படியும் வாழ முடியுமா?.. காரும் இல்லை.. சேமிப்பும் இல்லை.. ஆனா நிம்மதியா இருக்காரு”.. வைரலாகும் 35 வயது நபரின் ‘நோ கடன் ரகசியம்.. நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்திய பதிவு..!! – cinefeeds
Connect with us

Uncategorized

“இப்படியும் வாழ முடியுமா?.. காரும் இல்லை.. சேமிப்பும் இல்லை.. ஆனா நிம்மதியா இருக்காரு”.. வைரலாகும் 35 வயது நபரின் ‘நோ கடன் ரகசியம்.. நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்திய பதிவு..!!

Published

on

சொந்தமாக வீடோ, காரோ, வங்கியில் பெரிய முதலீடுகளோ இல்லை என்றாலும் கடனில்லா நிம்மதியான வாழ்க்கையும், உடல் மற்றும் மன ஆரோக்கியமுமே சிறந்தது என்ற 35 வயதான ஆஷிஷ் ஜெயின் என்பவரின் சமூக ஊடகப் பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. “நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன், பயணத்திற்கு ஊபரைப் பயன்படுத்துகிறேன், கடன்கள் எதுவும் இல்லை; கடந்த ஆண்டை விட எனது மனநலமும் உடல் தகுதியும் பெருமளவில் மேம்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். எதிர்காலத்தைப் பற்றிய தேவையில்லாத கவலைகளைத் தவிர்த்து, புகைப்பிடிப்பதை நிறுத்தி ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து வரும் இவரது கருத்து, 30 வயதிற்குள் சமூகத்தில் அனைத்தையும் சாதிக்க வேண்டும் என்ற அழுத்தத்தில் வாழும் லட்சக்கணக்கான இளைஞர்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்பதிவைக் கண்ட 72,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் இவருக்கு ஆதரவாகத் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “30 வயதிற்குள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் பெற்றிருக்க வேண்டும் என்ற சமூக எதிர்பார்ப்பே அதிக மன அழுத்தத்தை உண்டாக்குகிறது; 35 வயதில் நீங்கள் தாமதமாக வரவில்லை, இப்போதுதான் வாழ்க்கையைத் தொடங்குகிறீர்கள்” எனப் பலரும் அவரைப் பாராட்டியுள்ளனர். மேலும், சொந்த விதிகளின்படி வாழ்வதும், பிறருடன் ஒப்பிடாமல் ஒவ்வொரு நாளையும் அதன் போக்கில் எதிர்கொண்டு கடனில்லாமல் நிம்மதியாக வாழ்வதுமே உண்மையான மகிழ்ச்சி என்பதை உணர்த்தும் விதமாக இச்சம்பவம் பரவலான ஆதரவைப் பெற்று வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in