“சில்லறை இல்லனா கீழே இறங்குக”.. அமைச்சருக்கே இந்த நிலைமையா?.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

Uncategorized

“சில்லறை இல்லனா கீழே இறங்குக”.. அமைச்சருக்கே இந்த நிலைமையா?.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

Published

on

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயக்கப்படும் பி.எம்.டி.சி. மாநகரப் பேருந்துகளில் சில்லறைப் பற்றாக்குறை காரணமாகப் பயணிகள் கீழே இறக்கிவிடப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் இரவு நேரத்தில் முகக்கவசம் அணிந்து இரகசியப் பரிசோதனையில் ஈடுபட்டார். ஹெப்பால் பகுதியில் பேருந்தில் ஏறிய அமைச்சர், தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு ரூ.100 நோட்டைக் கொடுத்து 2 டிக்கெட்டுகளைக் கேட்டுள்ளார். அவர் அமைச்சர் என்று தெரியாத நடத்துநர், சரியான சில்லறை தராவிட்டால் பேருந்தை விட்டு இறங்குமாறு கூறியுள்ளார். அமைச்சர் தன்னிடம் சில்லறை இல்லை என்று கூறியதை ஏற்க மறுத்த நடத்துநர், பேருந்தை நிறுத்தி அமைச்சரையும் அவரது நண்பரையும் நடுவழியில் கீழே இறக்கிவிட்டுள்ளார்.

🚍🔍 Karnataka Transport Minister Byrathi Suresh మారువేషంలో Mask ధరించి Bengaluruలోని Jayamahal, RT Nagar, Hebbal, Nagavara, Hennur, Geddalahalli ప్రాంతాల్లో 2 గంటల పాటు 10కుపైగా BMTC బస్సుల్లో ప్రయాణిస్తూ ప్రజా రవాణా సేవలను ఆకస్మికంగా పరిశీలించారు.#Karnataka #Bengaluru #BMTCpic.twitter.com/Klx6cWH2CL— ముచ్చట్లు (@muchatlu_) July 12, 2026

அடுத்ததாக மற்றொரு நிறுத்தத்தில் பேருந்து ஒன்று நிற்காமல் சென்றதால் பயணி ஒருவர் பாதிக்கப்பட்டதையும் அமைச்சர் கவனித்துள்ளார். பேருந்தை விட்டு இறங்கியதும் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட அமைச்சர் பைரதி சுரேஷ், சில்லறை இல்லை என்பதற்காகத் தன்னை நடத்துநர் கீழே இறக்கிவிட்டது குறித்தும், நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரின் பொறுப்பற்ற செயல் குறித்தும் விவரித்தார். மேலும், தவறிழைத்த அந்த நடத்துநர் மற்றும் ஓட்டுநரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சுமார் இரண்டு மணி நேரத்தில் 10 பேருந்துகளில் அமைச்சர் மேற்கொண்ட இந்த அதிரடி ஆய்வின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாய்ப் பரவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in