FLASH: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்…!! – cinefeeds
Connect with us

Uncategorized

FLASH: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்…!!

Published

on

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகிய இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் அவர் தலைமறைவாக மாட்டார் என்றும், வழக்கின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பார் என்றும் நீதிமன்றத்தில் பலத்த உறுதி அளிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், அவர்கள் இருவருக்கும் கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீனை வழங்கியுள்ளது. இந்த உத்தரவின்படி, செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகிய இருவரும் தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி ஆணையிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in