Uncategorized
இவர் தான் ரியல் ஹீரோ..! 40 அடி பாலத்தில் இருந்து குதித்து பெண்ணை மீட்ட டெலிவரி பாய்… இணையத்தை உலுக்கும் நிஜ வாழ்க்கை ஹீரோவின் பகீர் வைரல் வீடியோ..!”
கிழக்கு சீனாவின் கியாண்டாங் நதியில் நீரில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணைக் காப்பாற்றுவதற்காக, 40 அடி உயரப் பாலத்தில் இருந்து குதித்த 31 வயதான பெங் கிங்க்லின் என்ற டெலிவரி பாயின் வீரம் செறிந்த செயல் இணையத்தில் வைரலாகி பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. வழக்கம்போல வாடிக்கையாளர் ஒருவருக்கு உணவை டெலிவரி செய்யச் சென்று கொண்டிருந்த பெங், ஆற்றில் ஒரு பெண் உயிருக்காகப் போராடுவதைக் கண்டுள்ளார். சற்றும் யோசிக்காமல் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, 40 அடி உயரப் பாலத்தின் ரெயிலிங் மீது ஏறி ஆற்றுக்குள் குதித்து, அந்தப் பெண்ணைப் பத்திரமாக மீட்டுள்ளார்.
இந்தத் துணிச்சலான செயலின் மூலம் நிஜ வாழ்க்கை ஹீரோவாக மாறிய பெங்கிற்குப் பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்து வருகின்றன. இவரது வீரத்தைப் பாராட்டி ஹாங்சோ நகர காவல்துறை அவருக்கு ‘நெறிமிக்க மனிதர்’ என்ற பட்டத்துடன் 30,000 யுவான் (சுமார் ₹4.23 லட்சம்) ரொக்கப் பரிசு வழங்கியுள்ளது. மேலும், அவர் பணிபுரியும் ஜெப்டோ போன்ற டெலிவரி நிறுவனம் அவருக்கு 50,000 யுவான் (சுமார் ₹7 லட்சம்) பரிசு வழங்கியதோடு, அவரது கல்லூரிப் படிப்பிற்கான முழுச் செலவையும் ஏற்பதாக அறிவித்துள்ளது.
https://www.instagram.com/reel/Dba7IW1hPbn/?utm_source=ig_web_button_share_sheet
இருப்பினும், இந்த இமாலயப் பாராட்டுக்கு பின்னால் அவர் ஒரு பெரிய விலையையும் கொடுக்க வேண்டியதாயிற்று. 40 அடி உயரத்தில் இருந்து தண்ணீரில் குதித்த வேகத்தில் அவரது முதுகெலும்பில் ‘கம்ப்ரஷன் பிராக்சர்’ ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்த அறுவை சிகிச்சையும் தேவையில்லை என்றும், ஓய்வெடுத்தாலே முற்றிலும் குணமடைந்து விடுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் 48 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவை நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.
