“அடக்கடவுளே.. தட்டிக் கேட்டா ஜெயிலா..?” காப்பகத்தில் குழந்தைகளுக்கு நடந்த கொடுமை..! ஆதாரத்தோடு போட்டுக்கொடுத்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. வியட்நாமை உலுக்கிய பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

Uncategorized

“அடக்கடவுளே.. தட்டிக் கேட்டா ஜெயிலா..?” காப்பகத்தில் குழந்தைகளுக்கு நடந்த கொடுமை..! ஆதாரத்தோடு போட்டுக்கொடுத்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. வியட்நாமை உலுக்கிய பகீர் சம்பவம்..!!

Published

on

வியட்நாமில் தற்போது மிகவும் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வரும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்றில் பணிபுரிந்த பெண் பராமரிப்பாளர், தனது சக ஊழியர் குழந்தைகளுக்குச் செய்து வந்த அநியாயங்களைக் கண்டு தீவிரமான குற்ற உணர்ச்சிக்கு ஆளானார். இதனால், அங்கு நடக்கும் கொடுமைகளை யாருக்கும் தெரியாமல் தனது தொலைபேசியில் ரகசியமாகப் படம் பிடித்தார். பின்னர், அந்த மையத்தில் இருந்து தனது வேலையை ராஜினாமா செய்த கையோடு, தான் எடுத்த வீடியோ ஆதாரங்கள் அனைத்தையும் இணையத்தில் வெளியிட்டார்.

இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி, பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இதன் தொடர்ச்சியாக, வீடியோக்கள் வெளியான அன்றைய இரவே காவல் துறையினர் விரைந்து வந்து, குழந்தைகள் மீதான கொடுமைகளைச் படம்பிடித்து வெளியிட்ட அந்தப் பெண் பராமரிப்பாளரைக் கைது செய்தனர். தற்போது அவர் மீது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தவறைத் தட்டிக்கேட்டு ஆதாரங்களை வெளியிட்ட நபரே கைது செய்யப்பட்டிருப்பது அந்நாட்டில் பெரும் சர்ச்சையை உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in